LATEST NEWS
அடக்கடவுளே நோயாளியிடமே இப்படியா..? பரிசோதனைக்குச் சென்ற பெண்ணிடம் 2.25 பவுன் நகை அபேஸ் செய்த நர்ஸ்… சென்னை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..!!
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கவுசல்யா (50) என்பவர், கடந்த ஜூன் 6-ஆம் தேதி அறுவை சிகிச்சைக்காக ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஜூன் 8-ஆம் தேதி எக்கோ பரிசோதனைக்குச் சென்றபோது, அங்கிருந்த ஜோதி (32) என்ற நர்சு கவுசல்யாவின் 2.25 பவுன் நகைகளைப் பாதுகாப்பிற்காகத் தற்காலிகமாகப் பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால், பரிசோதனை முடிந்து கவுசல்யா திரும்பியபோது நர்சு ஜோதி நகைகளுடன் தலைமறைவானது தெரியவந்தது.
நகைகளைத் திரும்பத் தர மறுத்து ஏமாற்றிய நர்சு ஜோதி மீது, பாதிக்கப்பட்ட கவுசல்யா ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த போலீசார், மீஞ்சூரில் பதுங்கியிருந்த ஜோதியை தற்போது கைது செய்துள்ளனர்.
