LATEST NEWS
“ஆபாச நதி, வக்கிர நதியை உருவாக்கியதே ஸ்டாலின்தான்” மார்தட்டி ஒப்புக்கொண்டார்… எக்ஸ் தளத்தில் பொங்கிப் பாய்ந்த முதலமைச்சர் விஜய்..!!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் வேட்பாளரான வி. சத்தியபாமாவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்து பேசியதாகக் கூறி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். பிரசாரம் என்ற பெயரில், தீய சக்தியான திமுக சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகமான கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தியுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
தனது கண்டனப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், திமுக சார்பாக காலம் காலமாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதி, வன்மநதி மற்றும் வக்கிரநதியை உருவாக்கியதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதை, அவர் மேடையில் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று மிகக் காரசாரமாகத் தாக்கியுள்ளார். பெண்களைத் தொடர்ந்து ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசி வரும் திமுகவின் இந்த அரசியல் கலாச்சாரம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது அறிக்கையில் விவரித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தாராபுரம் பிரசாரக் கூட்டத்தில், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு மாறிய சத்தியபாமாவை “பெட்டி பாமா”, “பல்டி பாமா” என்று குறிப்பிட்டதோடு, “அந்த உடம்பை வைத்துக்கொண்டு அவர் எப்படி பல்டி அடித்தார் என்று தெரியவில்லை” என்று பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திலும் ஸ்டாலினுக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
