LATEST NEWS
BREAKING: என்னைப்பத்தி என்ன பேசினாலும் தாங்கிக்குவேன் ஆனால்.. திமுகவுக்கு CM விஜய் எச்சரிக்கை..!!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளர் பி. சத்யாபாமா குறித்து விமர்சித்ததாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அதற்கு மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். “என்னைப்பற்றி நீங்கள் என்ன பேசினாலும் நான் தாங்கிக் கொள்வேன்; ஆனால் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசினால் நான் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று அவர் தேர்தல் மேடையில் ஆவேசமாக முழங்கியுள்ளார்.
திமுக பரப்புரையில் சத்யாபாமா குறித்துக் காது கொடுத்துக் கேட்க முடியாத வகையில் ஆபாசமாகவும், வன்மத்துடனும் ஸ்டாலின் பேசியதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர் விஜய், இத்தகைய செயல்பாடுகள் அவர்களின் தனிநபர் விமர்சன மற்றும் ஆபாச அரசியலையே காட்டுவதாகச் சாடியுள்ளார். தாராபுரம் தொகுதி மக்கள் இத்தகைய அவதூறுகளுக்குத் தங்களின் வாக்குகள் மூலம் அக்டோபர் 6 அன்று தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பிரகடனப்படுத்தியுள்ளார்.
