நெஞ்சை உலுக்கும் காட்சி..! அரசு மருத்துவமனையில் ஒரு ஸ்ட்ரெச்சர் கூட தரல.. மாற்றுத்திறனாளி தம்பியை முதுகில் சுமந்து ஓடிய அக்கா..!! – cinefeeds
Connect with us

CRIME

நெஞ்சை உலுக்கும் காட்சி..! அரசு மருத்துவமனையில் ஒரு ஸ்ட்ரெச்சர் கூட தரல.. மாற்றுத்திறனாளி தம்பியை முதுகில் சுமந்து ஓடிய அக்கா..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்ட அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதைத் தோலுரித்துக் காட்டும் இதயத்தை ரணமாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகோகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாபாய் என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மாற்றுத்திறனாளி சகோதரரான ஜெகதீஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவிற்கோ அல்லது வார்டுக்கோ அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலி போன்ற எந்தவொரு மருத்துவ வசதியும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, பாசப் போராட்டத்திற்கு மத்தியில் அந்தப் பெண் தனது மாற்றுத்திறனாளி சகோதரனைத் தனது முதுகில் சுமந்து கொண்டு மருத்துவமனை வார்டை நோக்கி ஓடியுள்ளார்.

Advertisement

இந்தக் காட்சியைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதனைத் தங்களின் மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது நாடு முழுவதும் வைரலாகி அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in