LATEST NEWS
பாஸ்..! “நீங்கதான் உலகத்தோட நாயகன்” இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் தீபமேற்ற 174 உயிர்களை கைப்பற்றிய இந்திய விமானிக்கு அழைப்பு..!!
துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைடுபாய் விமானத்தில், நடுவானில் சக ஓமானி துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், சாமர்த்தியமாகச் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காத்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரோ சர்வதேச அளவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார். இந்த அசாதாரணச் சம்பவத்தின் போது, படுகாயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் விமானி அறையின் கதவைத் திறந்து காட்டியதால், பயணிகள் மற்றும் பிற விமானப் பணியாளர்கள் இணைந்து தாக்குதல் நடத்தியவரை முறியடித்து விமானத்தைக் காப்பாற்றினர்.
இந்தச் சூழலில், கேப்டன் ஸ்மித் மச்சாரோவை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அவரை “இஸ்ரேல், இந்தியா மற்றும் ஒட்டுமொத்த உலகிற்குமே நீங்கள் ஒரு உண்மையான நாயகன் என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். மேலும், நடுவானில் நிகழவிருந்த மிகப் பெரிய விமானப் பேரழிவைத் தடுத்த அவரது தீரமிக்க செயலை உலக நாடுகள் பலவும் போற்றி வருகின்றன.
இந்த வீரமிக்க செயலுக்கு மகுடம் சூட்டும் விதமாக, இஸ்ரேலின் அடுத்த சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு கேப்டன் ஸ்மித் மச்சாரோவுக்கு பிரதமர் நேதன்யாகு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். இந்த விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து, சுதந்திர தினத் தீபமேற்றும் கௌரவமிக்க நிகழ்வில் கேப்டன் ஸ்மித் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் தனது அழைப்பில் விருப்பம் தெரிவித்துள்ளார்.
