உங்க குடும்ப விஷயம் நள்ளிரவில் Insta-வில் உலா வருவது ஏன்..? ஒப்பாரி வைக்காதீங்க Detention Copy காட்டுங்க.? திமுகவை வச்சி செஞ்ச தவெக ஐடி விங்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்க குடும்ப விஷயம் நள்ளிரவில் Insta-வில் உலா வருவது ஏன்..? ஒப்பாரி வைக்காதீங்க Detention Copy காட்டுங்க.? திமுகவை வச்சி செஞ்ச தவெக ஐடி விங்..!!

Published

on

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. அவசரநிலை பிரகடனத்தின் போது நடைபெற்ற மிசா கைது விவகாரம் தொடர்பாக தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு திமுக தலைவரை நோக்கிய தங்களின் கடுமையான விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது.

தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், மிசா கைது குறித்து மேடைக்கு மேடை ஒப்பாரி வைக்கிறீர்களே தவிர, அதற்கான அதிகாரப்பூர்வ கைது ஆணை நகலை (Detention Copy) பொதுவெளியில் காட்ட மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது. காலம் காலமாக போலிப் பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட கதைகள் தற்போதைய அரசியல் சூழலில் உடைந்து வருவதால் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் வெளிப்பாடே இது என்றும் தவெக விமர்சித்துள்ளது.

Advertisement

மேலும், ‘ரீல்ஸ் ஆட்சி என்று ரீல்ஸ் போட்டு புலம்பும் ஊழல் பீரோ மன்னனே உங்களின் ஆபாசநதி, வன்மநதி – குடும்பச் சொத்து நள்ளிரவில் வரு வருவதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று சாடியுள்ளது. பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசும் ஒரு கூட்டத்திற்குத் தலைமையேற்று நடத்துபவர்களே தொடர்ந்து வன்மத்தை உமிழ்ந்து வருவதாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் மிகக் காட்டமாகப் பதிவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in