LATEST NEWS
அம்மாடியோ…! அலறி அடித்து ஓடிய மாணவிகள்… மகளிர் விடுதி பாத்ரூமில் ஒளிந்திருந்த 10 அடி இராட்சத மலைப்பாம்பு… உயிரைப் பணயம் வைத்து மீட்ட நபர்…! திக் திக் நிமிடங்கள்..!!
மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் உள்ள திலி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதியின் கழிப்பறைக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. கழிப்பறைக்குச் சென்ற மாணவிகள் இந்த பிரம்மாண்ட பாம்பைக் கண்டு கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர். உடனடியாக இச்சம்பவம் குறித்து விடுதி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் அக்வீல் பாபா என்ற பாம்பு பிடிக்கும் நிபுணர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். விடுதி மாணவிகளும் ஊழியர்களும் பாதுகாப்பான தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்க, அக்வீல் பாபா கழிப்பறைக்குள் இருந்த பாம்பை மிகுந்த எச்சரிக்கையுடன் பிடிக்க முயன்றார். சிறிது நேர போராட்டத்திற்குப் பிறகு, பாம்பிற்கு எந்தவித காயமும் ஏற்படாதவாறு அவர் அதை பத்திரமாக மீட்டார்.
அந்தப் பகுதியில் குன்றுகளும் அடர்ந்த மரங்களும் நிறைந்த இயற்கை சூழல் இருப்பதால், இதுபோன்ற பாம்புகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதாக அக்வீல் பாபா தெரிவித்தார். அந்த பகுதியில் இருந்து இதுவரை சுமார் 70 முதல் 75 மலைப்பாம்புகளை தான் மீட்டு வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வனப்பகுதியில் விட்டுள்ளதாக கூறிய அவர், வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ பாம்புகளைக் கண்டால் மக்கள் தாமே பிடிக்கவோ, துன்புறுத்தவோ முயலாமல் உடனடியாக பயிற்சி பெற்ற மீட்பாளர்களையோ அல்லது அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
