LATEST NEWS
“லைக்குக்காக இப்படியா..?” மலைப்பாம்பைக் கையில் பிடித்துப் போஸ் கொடுத்த இளைஞர்.. அடுத்த நொடியே நடந்த விபரீதம்.. வைரலாகும் திகில் வீடியோ..!!
மலைப்பாம்பு ஒன்றை மீட்ட இளைஞர் ஒருவர், அதனைத் தனது கைகளில் பிடித்தபடி சமூக வலைதளத்திற்காக ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றபோது பாம்பு அவரைக் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பைப் பிடித்துக் கொண்டு வீடியோவிற்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக அந்த மலைப்பாம்பு இளைஞரின் கன்னத்தில் மிகக் கடுமையாகக் கடித்துப் பிடித்துக் கொண்டது.
பாம்பின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் அந்த இளைஞர் நீண்ட நேரம் கடுமையாகப் போராடிய பிறகு, ஒருவழியாகத் தன்னை விடுவித்துக் கொண்டார். சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக இதுபோன்ற ஆபத்தான விலங்குகளுடன் விளையாட வேண்டாம் என்றும், சிறிய கவனக்குறைவு கூட மிகப்பெரிய உயிரிழப்பு அல்லது விபரீதத்திற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
