LATEST NEWS
“அடப்பாவிகளா.. ஓடும் ரயிலை மறித்த கிராம மக்கள்..” அடுத்த நொடியே அவங்க செய்த காரியத்தை பாருங்க.. நெட்டிசன்களைக் கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
மேற்கு வங்க மாநிலத்தில் விஸ்வகர்மா பூஜையை முன்னிட்டு, கிராம மக்கள் சிலர் தண்டவாளத்தில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு, வேகமாக வந்து கொண்டிருந்த லோக்கல் ரயில் ஒன்றை அதிரடியாக நிறுத்தியுள்ளனர். ரயில் நின்ற உடனே, எவ்வித பயமும் இல்லாமல் அதன் எஞ்சினுக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து அவர்கள் பூஜை செய்துள்ளனர். விஸ்வகர்மா பூஜையின் போது இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை வழிபடுவது வழக்கம் என்றாலும், ஓடும் ரயிலை மறித்து தண்டவாளத்தில் நின்றபடி இப்படிப் பூஜை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசித்திரமான மற்றும் ஆபத்தான வழிபாட்டுச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், பக்தி என்ற பெயரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதையும், ரயில் எஞ்சினுக்குப் பூஜை செய்ய ஓடும் ரயிலை நிறுத்திய கிராம மக்களின் இந்த பொறுப்பற்ற செயலையும் சமூக ஊடகங்களில் காரசாரமாக விவாதித்து, தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
