LATEST NEWS
நகை வைப்போருக்கு புதிய ரூல்ஸ்.. சேமிப்பவர்களுக்கு பம்பர் சான்ஸ்.. கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு டபுள் ஜாக்பாட்..!!
கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்து பெறப்படும் நகைக்கடன்களுக்கான உச்சவரம்புத் தொகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, அவசர பணத்தேவைக்காக நகைகளை அடகு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ₹10,000 அல்லது தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பில் 75 விழுக்காடு (75%) தொகை ஆகியவற்றில் எது குறைவாக உள்ளதோ, அந்தத் தொகை கடனாக வழங்கப்பட உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கூட்டுறவுத்துறை இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதைத் தவிர, நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பாக, கூட்டுறவு வங்கிகளில் பணத்தை வைப்புத் தொகையாக (Fixed Deposit) சேமிப்பவர்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.25 சதவீதமாக (8.25%) உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்களுக்கு இந்த பொது வட்டி விகிதத்துடன் சேர்த்து கூடுதலாக 0.25% வட்டி வழங்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருமுனை அறிவிப்புகள் கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
