“விஜய் அண்ணா நீங்க தான் என் உலகம் உயிர் ஆனால்” தவெக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. முதல்வர் விஜய்க்கு உருக்கமான வீடியோ வெளியீடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய் அண்ணா நீங்க தான் என் உலகம் உயிர் ஆனால்” தவெக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. முதல்வர் விஜய்க்கு உருக்கமான வீடியோ வெளியீடு..!!

Published

on

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளரான முத்துக்குமரன் என்பவர், கட்சியின் உட்கட்சிப் பதவி மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேரலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி புறநகர் மாவட்ட த.வெ.க. செயலாளரான அமைச்சர் மதன்ராஜா, கடந்த சில மாதங்களாக கட்சி நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டுத் தனது ஆதரவாளர்களுக்கும் உறவினர்களுக்கும் புதிய பொறுப்புகளை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த குழந்தைராஜா என்பவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தி.மு.க.விலிருந்து வந்த பாரத் என்பவரைப் புதிய ஒன்றிய செயலாளராக அமைச்சர் மதன்ராஜா அறிவித்தார். இந்தத் திடீர் பதவி மாற்றத்தால் கடும் மனமுடைந்த குழந்தைராஜாவின் ஆதரவாளரான முத்துக்குமரன், த.வெ.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான விஜய்க்கு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்தத் தீவிர முடிவை எடுத்துள்ளார்.

Advertisement

அவர் வெளியிட்ட வீடியோவில், தான் கடந்த 26 ஆண்டுகளாக விஜய்யின் தீவிர ரசிகனாகப் பயணித்து வருவதாகவும், விஜய் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் குளறுபடிகள் குறித்துப் பலமுறை மின்னஞ்சல் அனுப்பியும், நேரில் பேச முயன்றும் கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தி.மு.க.விலிருந்து வந்தவர்களுக்கே முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுவதால் கட்சி தி.மு.க. கூடாரமாக மாறி வருவதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிவேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட முத்துக்குமரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in