CRIME
“செல்போன்ல அப்படி என்ன பேச்சு..?” பிரேக் அடித்திருந்தால் குழந்தை உயிரோடு இருந்திருப்பான்…” 8 வயது சிறுவனை பலிகொண்டும் காரை விட்டு இறங்க மறுத்த பெண்… அலறியடித்து ஓடிவந்த பொதுமக்கள்..! நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பம்..!!
மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள ஜிஜாமாதா பூங்கா எதிரே உள்ள ஜான் பாப்டிஸ்ட் சாலையில், அன்ஷ் ரவீந்திர குப்தா என்ற 8 வயது சிறுவன் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த இன்னோவா க்ரிஸ்டா கார் மோதி உயிரிழந்தான். ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது காரை ஓட்டி வந்தவர் பாந்த்ராவைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான மேகா ராவல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விபத்து நடந்தவுடன் உள்ளூர்வாசிகளும் காவல்துறையினரும் காரை ஓட்டி வந்த பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த கடைக்காரர் ஒருவர் கூறுகையில், காரை ஓட்டிவந்த பெண் மொபைல் போனில் முழுமையாகக் கவனத்தைச் செலுத்தியபடி காரை ஓட்டியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “அந்தப் பெண் மொபைலில் மூழ்கியிருந்ததால் என்ன நடந்தது என்றே அவருக்குத் தெரியவில்லை. காரின் முன் சக்கரம் சிறுவன் மீது ஏறியபோதாவது அவர் பிரேக் அடித்திருக்கலாம், அப்படிச் செய்திருந்தால் சிறுவன் உயிர்தப்பியிருக்கக் கூடும். ஆனால் அவர் காரை நிறுத்தாமல் பின் சக்கரத்தையும் சிறுவன் மீது ஏற்றிவிட்டார். பின்னர் காரை நிறுத்திய பிறகும் அவர் காரை விட்டு வெளியே வரவுமில்லை, கண்ணாடியைக் கீழே இறக்கவுமில்லை” என்று நேரில் பார்த்தவர் குற்றஞ்சாட்டினார்.
விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு வெளியில் பெரியளவில் ரத்தக் காயங்கள் ஏதும் தென்படவில்லை என்றாலும், உடலின் உட்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்து நடந்த அதே காரிலேயே சிறுவன் உடனடியாக ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். இருப்பினும், மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாந்த்ரா காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 105 மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மேகா ராவலை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
