CRIME
சாவு எப்படி வருது பாருங்க..? விளையாடிக்கொண்டிருந்தபோது காரில் சிக்கி 4 வயது சிறுமி பரிதாப பலி… கதறி அழும் தாய்..!!
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள விநாயக்நகரில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த சிறுமி தன்வி ஸ்ரீ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறுமி தன்வி ஸ்ரீ வீட்டின் வெளியே விளையாடச் சென்றபோது, அங்கே நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக காரின் கதவுகள் தானாகப் பூட்டிக்கொண்டதால், சிறுமியால் வெளியே வர முடியாமல் பல மணி நேரம் காரின் உள்ளேயே சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சிறுமியைக் காணாமல் அவளது குடும்பத்தினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், காரின் உள்ளே அவர் சுயநினைவின்றி இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிறுமி எவ்வளவு நேரம் காரில் இருந்தார் மற்றும் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
