சைஸ் வேணா வேற இருக்கலாம்… ஆனா எல்லாருக்கும் ஒரே கம்பெனி தான்… நைட்டோட நைட்டா ஓடிட்டாங்க… கிழித்தெடுத்த உதயநிதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சைஸ் வேணா வேற இருக்கலாம்… ஆனா எல்லாருக்கும் ஒரே கம்பெனி தான்… நைட்டோட நைட்டா ஓடிட்டாங்க… கிழித்தெடுத்த உதயநிதி..!!

Published

on

தமிழக அரசியல் களம் தவெக மற்றும் திமுக இடையேயான மோதலால் நாளுக்கு நாள் சூடேறி வரும் நிலையில், மதுராந்தகம் பகுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தற்போதைய தவெக கூட்டணி கட்சிகளைத் தனது பாணியில் மிகக் கடுமையாகக் கிண்டலடித்துப் பேசியுள்ளார். தவெக தலைமையிலான தற்போதைய கூட்டணியில் அரங்கேறி வரும் உட்கட்சிப் பூசல்களையும், கட்சித் தாவல்களையும் அவர் மேடையில் வெளிப்படையாக விமர்சித்தார்.

மேடையில் பேசிய அவர், “அவர்களின் கூட்டணி கட்சிகளைப் பார்த்தால், ‘சைஸ் வேணா வேற இருக்கலாம், ஆனா எல்லாருக்கும் ஒரே கம்பெனி தான்’ என்பது போலத்தான் இருக்கிறது” என்று சாடினார். மேலும், தவெக அரசுடன் இணக்கமாக இருந்த சில கட்சிகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட உதயநிதி, “சிலர் வெளியே சொல்லிக்கொண்டு ஆதரவு கொடுத்துவிட்டுப் போனார்கள். ஆனால், வேறு சிலரோ யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல், நைட்டோட நைட்டாகத் திருட்டுத்தனமாக ஓடிப்போய்விட்டார்கள்” எனத் தவெக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளின் நகர்வுகளை விமர்சித்தார்.

Advertisement

தொடர்ந்து தவெக அரசை ‘சோஃபா மாடல்’ அரசு என்று விமர்சித்த அவர், “இன்னும் சில பேருக்கு சோஃபாவே வரவில்லை” என்று அக்கூட்டணியில் உள்ள முரண்பாடுகளையும், பதவிப் போட்டிகளையும் நகைச்சுவையோடு எள்ளி நகையாடினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த அதிரடியான கிண்டல் பேச்சு, தவெக கூட்டணிக்குள்ளும் ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in