CRIME
“உன் அம்மாவைக் கொன்னுடுவேன்..!” வளர்ப்பு மகளை 5 ஆண்டுகளாக மிரட்டிய ஆயுதப்படை காவலர் செய்த வெறிச்செயல்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
சென்னையை அடுத்த பெரவள்ளூரில் தனது தாயைக் கொன்றுவிடுவதாக மிரட்டி, வளர்ப்பு மகளை 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 58 வயதுடைய ஆயுதப்படை காவலர் வேல்முருகன் என்பவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 21 வயது இளம் பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தாயை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட காவலர் வேல்முருகன், தனக்கு 17 வயது இருக்கும் முதலே இந்தத் தவற்றைச் செய்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் தாயைக் கொன்றுவிடுவதாக மிரட்டி, கடந்த ஐந்து வருடங்களாகத் தன்னைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அவர் அழுதுகொண்டே வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தக் கொடூரப் புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், தலைமறைவாக இருந்த காவலர் வேல்முருகன் மீது போக்சோட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஒரு காவலரே, தனது வளர்ப்பு மகளை மைனர் வயது முதலே மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த இந்த விபரீதச் சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
