LATEST NEWS
“ஐயோ கடவுளே… கல்யாண வீட்ல கேட்ட மரண ஓலம்… தார்பாயை சரி செய்யப்போய் முடிந்த வாழ்க்கை..” வயலில் நடந்த நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்..!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் நெஞ்சை பதறவைக்கும் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்குள்ள கோவிந்த்கர் காவல் எல்லைக்குட்பட்ட பைன்ஸ்ராவத் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், வயலில் கம்பு (பாஜ்ரா) அறுவடைக்குப் பிந்தைய பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, த்ரெஷர் இயந்திரத்தின் பெல்ட்டில் சிக்கி சப்னா (18) என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் அப்பெண்ணின் இரு கைகளும் துண்டிக்கப்பட்டு உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பைன்ஸ்ராவத் கிராமத்தைச் சேர்ந்த துளசிராம் சைனி என்பவர் தனது குடும்பத்தினருடன் வயலில் டிராக்டர் மற்றும் த்ரெஷர் இயந்திரம் மூலம் கம்பு பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். துளசிராம் த்ரெஷர் இயந்திரத்தின் மேல் நின்று கம்பு கதிர்களை போட்டுக்கொண்டிருக்க, அவரது மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் கதிர்களை எடுத்து வந்து கொடுத்துக் கொண்டிருந்தனர். இயந்திரத்திலிருந்து வெளிவரும் கம்புகளை மூன்றாவது மகளான சப்னா அள்ளிச் சேர்த்துக் கொண்டிருந்தார். அப்போது த்ரெஷரின் கீழே விரிக்கப்பட்டிருந்த தார்பாய் காற்றில் அடிக்கடி பறந்து கொண்டிருந்ததால், அதைச் சரிசெய்வதற்காக சப்னா சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சப்னா த்ரெஷர் இயந்திரத்தின் பெல்ட்டில் சிக்கியதில், அவரது இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தன. தீவிர காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன சப்னாவுக்கும் அவரது இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் வரும் ‘தேவுதானி ஏகாதசி’ அன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில், வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. திருமணக் களையாக இருந்த வீட்டில், இச்சம்பவத்தால் பெரும் சோகம் சூழ்ந்துள்ளது.
