மூளைச்சாவு அடைந்த 26 வயது ஐடி இளைஞர்… மரணத்திற்குப் பிறகும் நடந்த மெகா அதிசயம்.. பெற்றோர் எடுத்த அந்த ஒரு நெகிழ்ச்சியான முடிவு..!! – cinefeeds
Connect with us

CRIME

மூளைச்சாவு அடைந்த 26 வயது ஐடி இளைஞர்… மரணத்திற்குப் பிறகும் நடந்த மெகா அதிசயம்.. பெற்றோர் எடுத்த அந்த ஒரு நெகிழ்ச்சியான முடிவு..!!

Published

on

தெலுங்கானா காமாரெட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் கொடிக்யால் வினய் என்பவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் மற்றொரு ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி, மூளைக்கட்டி பாதிப்பால் வீட்டில் இருந்த வினய் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை காமாரெட்டியிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர மருத்துவக் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், இறுதியாக அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அடுத்து, வினய்யின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரது உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புகளான சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் நுரையீரல்களைச் சேகரித்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த ஐந்து நபர்களுக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர். தான் மறைந்தாலும் ஐந்து பேருக்குத் தனது உறுப்புகள் மூலம் வினய் உயிர் கொடுத்துள்ள இந்த நெகிழ்ச்சியான காரியம், சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in