LATEST NEWS
“இடைத்தேர்தல் தானேனு அசால்ட்டா இருந்துடாதீங்க” முதல்ல உங்க வீட்ல போயி… திமுக நிர்வாகிகளுக்கு உதயநிதி போட்ட ஸ்ட்ரிக் கண்டிஷன்…!!
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். சென்னை பூந்தமல்லியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இது வெறும் இடைத்தேர்தல் தானே என்று யாரும் அசால்ட்டாக இருந்துவிடக் கூடாது” என்று எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, தேர்தல் பணிகளைத் தங்களின் சொந்த வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும் என நிர்வாகிகளை அறிவுறுத்தினார். “அடுத்தவர்கள் வீடுகளுக்குச் சென்று வாக்குச் சேகரிப்பதற்கு முன்பாக, முதலில் உங்களுடைய சொந்த வீடுகளில் உள்ளவர்களிடம் பேசி கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துங்கள்; போன தடவை நாம் செய்த பெரிய தப்பை இந்த முறை மீண்டும் செய்துவிடக் கூடாது” என்று அவர் நிர்வாகிகளிடம் திறந்தமனதுடன் பேசியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சறுக்கல்களை மனதில் வைத்துப் பேசிய அவர், தற்போதைய தவெக ஆட்சியில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துக்கூறி, இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்குக் கற்பிக்கப்படும் சரியான பாடமாக அமைய வேண்டும் எனத் தெரிவித்தார். இந்தத் தேர்தலை தி.மு.க மிக கௌரவமானப் போராட்டமாகப் பார்ப்பதால், செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் நேரடித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
