அய்யோ கொடுமையே..! திருமணம் நின்ற ஆத்திரம்.. காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து 2 சகோதரிகள் மீது ஆசிட் வீசிய கொடூர வாலிபன்.. நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கொடுமையே..! திருமணம் நின்ற ஆத்திரம்.. காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து 2 சகோதரிகள் மீது ஆசிட் வீசிய கொடூர வாலிபன்.. நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

குடி மற்றும் போதைப்பொருள் பழக்கத்தால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நின்றதால், ஆத்திரமடைந்த வாலிபர் நள்ளிரவில் இரண்டு சகோதரிகள் மீது ஆசிட் வீசிய கொடூரச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாபூரைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்ற வாலிபருக்கும், கீர்த்தி என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஹர்ஷ் பாட்டியின் மோசமான குணம், அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் உபயோகம் ஆகியவற்றை அறிந்த கீர்த்தியின் குடும்பத்தினர், தங்களது மகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்று அஞ்சி இந்தத் திருமண நிச்சயதார்த்தத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஷ், தன்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கீர்த்தியைத் தொடர்ந்து வற்புறுத்தி, மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

திருமணத்திற்கு கீர்த்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால், பழிவாங்கத் துடித்த ஹர்ஷ் கடுமையான வீரியம் கொண்ட ஆசிட்டை விலைக்கு வாங்கிச் சரியான தருணத்திற்காகக் காத்திருந்துள்ளார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில், கீர்த்தியின் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறிக்குதித்து உள்ளே புகுந்த ஹர்ஷ், அங்கு வீட்டின் முத்தத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த கீர்த்தி மற்றும் அவரது சகோதரி வன்ஷிகா ஆகிய இருவர் மீதும் கொடூரமான முறையில் ஆசிட்டை ஊற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்து அலறிய இரு சகோதரிகளும் தற்பொழுது தீவிரச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய கொடூர வாலிபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in