“என் டிரஸ்ஸை பிடுங்கி.. வெறும் துண்டைக் கட்டிக்கிட்டு இருட்டுல.. சூரி நெஞ்சம் வெதும்பி வெளியிட்ட பகீர் ரகசியம்.!! – cinefeeds
Connect with us

CINEMA

“என் டிரஸ்ஸை பிடுங்கி.. வெறும் துண்டைக் கட்டிக்கிட்டு இருட்டுல.. சூரி நெஞ்சம் வெதும்பி வெளியிட்ட பகீர் ரகசியம்.!!

Published

on

திரைத்துறையின் ஆரம்பக் காலத்தில் தனக்கு நேர்ந்த மிகக் கொடூரமான அவமானம் மற்றும் ஏமாற்றம் குறித்து முன்னணி நடிகர் சூரி தற்பொழுது நேர்காணல் ஒன்றில் கண்ணீருடன் மனம் திறந்துள்ளார். சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு சுற்றிக் கொண்டிருந்த காலத்தில், தமிழ் சினிமாவின் மாபெரும் பிரபல காமெடியன் ஒருவருடன் இணைந்து நடிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது. ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் இவரை நடிக்க வைப்பதற்காகக் காஸ்டியூம் மாற்றி அழைத்துச் சென்ற நிலையில், ஒரே ஒரு ஷாட்டில் அந்தப் பொன்னான வாய்ப்பு இவரிடமிருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்த உடையைப் பிடுங்கி, சிபாரிசு மூலம் வந்திருந்த மற்றொரு நபருக்குக் கொடுத்து அவரை நடிக்க வைத்துள்ளனர்.

அந்த ஷாட் முடிவடைந்ததும், சிபாரிசில் வந்த நபர் சூரியின் உடைகளை அலட்சியமாகத் தரையில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளார். அசிங்கப்பட்டு நின்ற அந்த நள்ளிரவு நேரத்தில், உடுத்த உடை கூட இல்லாமல் வெறும் துண்டைக் கட்டிக் கொண்டு இருட்டிற்குள் தனது ஆடைகளைத் தேடி அலைந்த அந்த அவமானகரமான கணங்களை இன்று வரை தன் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று சூரி நெஞ்சம் வெதும்பிப் பேசியுள்ளார். ஆரம்பக் காலத்தில் இவ்வளவு பெரிய துரோகங்களையும், வறுமையையும் தாங்கி நின்ற ஒரு சாதாரண மனிதன், இன்று தனது அசாத்திய உழைப்பால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்பது பலருக்கும் மாபெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in