CINEMA
BREAKING: “ரூ.6 கோடி ஏமாத்திட்டாங்க”… நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா அதிரடி புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை ராதா, தனது சொந்தச் சகோதரியும் பிரபல நடிகையுமான அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தங்களுக்குச் சொந்தமான ஏ.ஆர்.எஸ். ஸ்டூடியோ நில விவகாரம் தொடர்பாக குடும்பத்திற்குள் ஏற்கனவே சில தினங்களாகச் சொத்துப் பிரச்னை புகைந்து வந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது.
தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் இருவரும் இணைந்து தனக்குச் செலுத்த வேண்டிய தொகையில் சுமார் 6 கோடி ரூபாய் அளவிற்கு செக் மோசடி செய்துள்ளதாக நடிகை ராதா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அரங்கேறியுள்ள இந்த செக் மோசடிப் புகார் மற்றும் காவல் ஆணையரகத்தில் அளிக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை கோரிக்கை, ஒட்டுமொத்தத் திரைத்துறையிலும் தமிழக அரசியல்-சமூக வட்டாரத்திலும் தற்பொழுது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
