CINEMA
என் தந்தை அந்த ஒரு நாளுக்காக ரொம்ப ஆவலாக காத்திருக்கிறார்… CM விஜய் குறித்து உண்மையை உடைத்த மகன் ஜேசன் சஞ்சய்…!!
‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக தனது தந்தையும் தமிழக முதலமைச்சருமான விஜய் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தந்தை ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தாலும், மகனின் முதல் படைப்பைக் காண ஆவலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் அரசியல் சார்ந்த எந்தவொரு விஷயமும் கலந்துவிடக் கூடாது என்பதில் தான் மிகவும் தெளிவாக இருப்பதாக ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார். ப்ரோமோஷன் நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாகப் படத்தை மட்டுமே மையப்படுத்தி இருக்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது முதலமைச்சராகத் தனது தந்தைக்கு ஏராளமான மக்கள் பணிகளும், பொறுப்புகளும் உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், ஒரு இயக்குநராகத் தான் என்ன செய்திருக்கிறேன், படத்தை எப்படி உருவாக்கியிருக்கிறேன் என்பதைப் பார்க்க முதலமைச்சர் விஜய் ஆர்வமாக உள்ளதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
