“விஜய் ஒரே ஒருமுறை அதைச் சொன்னால்” எல்லா பிரச்னையும் முடிந்துவிடும்… ராகுல் காந்திக்காக செல்வப்பெருந்தகை போட்ட அரசியல் ஸ்கெட்ச்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய் ஒரே ஒருமுறை அதைச் சொன்னால்” எல்லா பிரச்னையும் முடிந்துவிடும்… ராகுல் காந்திக்காக செல்வப்பெருந்தகை போட்ட அரசியல் ஸ்கெட்ச்..!!

Published

on

“முதலமைச்சர் விஜய், ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் பிரச்னை தீர்ந்ததே” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள தவெக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “விஜய்தான் பிரதமர் வேட்பாளர் எனக் கூறுவோர் பக்கம் நின்று கொண்டு, என் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் யார் என்று பிரவீன் சக்கரவர்த்தி கேட்கிறார்; நான் யார் என்று அவர் கேட்கத் தேவையில்லை, ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் உண்மையான காங்கிரஸ் தொண்டன் நான்” என்று தனது நிலைப்பாட்டைத் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.

Advertisement

இதன் மூலம் தவெக தரப்பில் இருந்து விஜய் பிரதமர் வேட்பாளர் என முன்வைக்கப்படும் கருத்துகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக தவெக தலைமை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் மற்றும் மோதல்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதைத் தனது பேச்சில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in