LATEST NEWS
“இனி பெட்ரோல் பங்குகளில் UPI Payment கிடையாது” ஒன்றிய அரசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!
UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிமுறையால், தங்களது லாப வரம்பு கடுமையாகப் பாதிக்கப்படும் எனப் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்தியப் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம், ஒன்றிய அரசுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கான இந்த UPI கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு விலக்கு அளிக்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் UPI மூலமாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஏற்பதை நிறுத்த நேரிடும் என்றும் சங்கம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வரும் நிலையில், இந்த புதிய கட்டண உயர்வு தங்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை நோக்கி நகர்வதாகப் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வாகன ஓட்டிகள் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
