ஓரம் கட்டப்பட்ட அமைச்சர் சரத்… தவெக தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து பெயர் தவிர்ப்பு… முதல்வர் விஜய் அதிருப்தியே காரணமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓரம் கட்டப்பட்ட அமைச்சர் சரத்… தவெக தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து பெயர் தவிர்ப்பு… முதல்வர் விஜய் அதிருப்தியே காரணமா..?

Published

on

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுப் பட்டியலைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை வெளியிட்டுள்ள நிலையில், அதில் அமைச்சர் சரத்குமாரின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக அவர் இருந்தபோதிலும், இந்த முக்கிய தேர்தல் பொறுப்பில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக வெளியூர் அமைச்சர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி மாற்றம் தவெக மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement

சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பவுடர் விவகாரம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, அமைச்சர் சரத்குமார் மீது முதலமைச்சர் விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியின் காரணமாகவே, தேர்தல் களப் பணிகளில் இருந்து அவர் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளார் எனத் கட்சித் தரப்பில் பேசப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in