LATEST NEWS
புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து கதறிய கில்லி சரத்…? “தளபதி பயங்கர கோபத்தில் இருக்கார்”.. அமைச்சர் பதவி பறிபோகிறதா…? வெளியான ஷாக்கிங் தகவல்…!!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ‘கில்லி’ சரத்குமார், அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய வீடியோவால் தமது பதவியை இழக்கும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்புக்கான பிரம்மாண்ட மாரத்தான் பேரணி நடந்த அதே தினத்தில், ஐபிஎல் போட்டியின் போது எடுக்கப்பட்ட அமைச்சர் சரத்தின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அதில் மொபைல் திரையின் மீது ஏடிஎம் கார்டைக் கொண்டு வெள்ளை நிறப் பவுடரை அவர் கோடு கிழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது தவெக அரசுக்கும், முதல்வரின் போதை ஒழிப்பு கொள்கைக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்திய நிலையில், “குழந்தைக்கு மாத்திரையை நசுக்கித் தரவே அப்படிச் செய்தேன்” என்று சரத் அளித்த விளக்கம் எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றுவது போல் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தால் கடும் கோபமடைந்த முதலமைச்சர் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அழைத்துத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், சரத்தை அமைச்சரவையில் இருந்து நீக்குவது குறித்தும் ஆலோசித்துள்ளார். தனது பதவிக்கு ஆபத்து வந்ததை உணர்ந்த அமைச்சர், நள்ளிரவில் தன் குடும்பத்தினருடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள புஸ்ஸி ஆனந்தின் இல்லத்திற்குச் சென்று, இது திட்டமிட்ட சதி என்றும் தனது பதவியைக் காப்பாற்றுமாறும் கண்ணீர்மல்கக் கெஞ்சியதாக கூறப்படுகிறது.
ஆனால், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை முதல்வர் சகித்துக்கொள்ள மாட்டார் என்றும், இதில் தம்மால் தலையிட முடியாது என்றும் புஸ்ஸி ஆனந்த் கறாராகக் கையை விரித்துவிட்டாராம் . இதனால் தவெக ஆட்சியில் மிக விரைவில் முதல் அமைச்சரவை மாற்றம் அரங்கேறப் போவதும், அதில் கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிபோவது உறுதியாகிவிட்டதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
