LATEST NEWS
டெண்டர் ரத்து.. வசமாக சிக்கும் அமைச்சர் விஜய் பாலாஜி… கமிஷன் பஞ்சாயத்து மேலிடத்திற்குச் சென்றதால் ஆப்பு../? ஆக்ஷனில் மேலிடம்..!!
ஈரோடு மாவட்டத்தில் எல்.இ.டி பல்புகள் அமைப்பதற்கான மாநகராட்சி டெண்டர் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில், ஒப்பந்தம் பெற வந்த நிறுவனங்களிடம் பெரும்தொகை கமிஷனாகக் கேட்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெண்டர் நடைமுறைகளின் போது மிகவும் குறைவான தொகையைக் குறிப்பிட்டு விண்ணப்பித்த நிறுவனத்திற்கு அந்த ஒப்பந்தத்தை வழங்க மறுத்து, ஒட்டுமொத்த டெண்டரையுமே அதிகாரிகள் திடீரென ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தின் பின்னணியில், அம்மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் விஜய் பாலாஜியின் ஆதரவாளர்களும் அவருக்கு நெருக்கமான நபர்களும் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்த்த கமிஷன் தொகை வந்து சேராத காரணத்தாலேயே, விதிகளுக்குப் புறம்பாகக் குறைந்த தொகையைக் குறிப்பிட்ட நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகப் புகார்கள் வலுத்து வருகின்றன.
தற்போது இந்த டெண்டர் முறைகேடு மற்றும் கமிஷன் விவகாரம் தொடர்பான புகார்கள் கட்சியின் மேலிடத்திற்குச் சென்றுள்ளதால், அமைச்சர் தரப்பு கடும் அச்சத்திலும் கலக்கத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆட்சிக்கும் கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது மேலிடம் அதிரடி நடவடிக்கை எடுக்கக் கூடும் என்பதால், இந்த விவகாரம் ஈரோடு மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை தொற்றிக்கொள்ளச் செய்துள்ளது.
