LATEST NEWS
சொந்த கட்சிக்கே துரோகம்..! அமைச்சர் பதவியை பறிக்க உள்ளடி வேலை.. தூக்கத்தைப் தொலைத்த அமைச்சர் ரமேஷ்… திமுக புள்ளியுடன் சேர்ந்து தவெக-வினர் செய்யும் மர்ம அரசியல்…!!
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷின் பதவியைப் பறிப்பதற்காக, அவருக்கு எதிராகக் கட்சிக்குள்ளேயே தீவிர உள்ளடி வேலைகள் நடந்து வருவதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டாஸ்மாக் மது கொள்முதல் நடைமுறையில் நடந்த முறைகேட்டைக் கண்டறிந்த அமைச்சர், அதில் சம்பந்தப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு ₹2 கோடி அபராதம் விதித்ததோடு, அந்நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதை ஒரு வாரத்திற்குச் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையால் கடுப்பான அந்தத் தனியார் நிறுவனம், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பைச் சமாளிக்கவும், அமைச்சருக்கு நெருக்கடி கொடுக்கவும் ஆளுங்கட்சியான திமுகவின் முக்கியத் தலைவர் ஒருவருடன் கைகோர்த்துக் கொண்டு பல்வேறு குடைச்சல்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சருக்கு எதிராகப் பல்வேறு வழிகளில் நெருக்கடிகளை முடுக்கிவிட்டு, அவரைப் பதவி விலகச் செய்வதற்கான நடவடிக்கைகள் பின்னணியில் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் பெரும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக, சொந்தக் கட்சியைச் சேர்ந்த தமிழக வெற்றித் கழகத்தினரே அந்த நிறுவனத்திற்கும் எதிர்த்தரப்பிற்கும் மறைமுகமாக உடந்தையாகச் செயல்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அமைச்சர் விக்னேஷை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றத் துடிக்கும் உட்கட்சி எதிரிகளினுடைய இந்த உள்ளடி வேலையால், கட்சித் தலைமைக்கும் அமைச்சருக்கும் இடையே தேவையில்லாத சர்ச்சைகள் உருவாகி, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
