LATEST NEWS
“அரவணைக்கவும் தெரியும்.. அடிச்சி திருத்தவும் தெரியும்” கூடுதலா காசு வாங்கினா அவ்ளோதான்… டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமைச்சர் விக்னேஷ் மரண மாஸ் எச்சரிக்கை..!!
மதுபான பாட்டில்களுக்கு மேல் கூடுதல் தொகை வசூலித்தால் அரசு எந்த விதத்திலும் ஆதரவு அளிக்காது என்று தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்குப் பிறகும் இத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டால், அவர்களுக்குச் சட்டப்படி வழங்கப்படும் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தவெக அரசுக்கு அரவணைக்கவும் தெரியும், அதே நேரத்தில் தவறு செய்பவர்களை அடித்துத் திருத்தவும் தெரியும் என அவர் காரசாரமாகப் பேசியுள்ளார்.
முன்னதாக, தவெக அரசு அமைந்த பிறகு மதுபான பாட்டில்களுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, தவறு செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீதும் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை அமைச்சர் தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
