“காசு வேண்டாம்மா.. முதல்ல அடிபட்டது எப்படி இருக்கு..” ஜப்பானில் இந்தியப் பெண்ணுக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காசு வேண்டாம்மா.. முதல்ல அடிபட்டது எப்படி இருக்கு..” ஜப்பானில் இந்தியப் பெண்ணுக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

Published

on

ஜப்பானில் வசித்து வரும் சோனம் மிதா என்ற இந்தியப் பெண், கடந்த வாரம் பெய்த பலத்த மழையில் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதுடன், அவரது சைக்கிளின் ஹேண்டில் பாரும் வளைந்து சேதமடைந்தது. அலுவலகத்தில் முதலுதவி பெற்ற சோனம், மதிய உணவு இடைவேளையின் போது அருகில் இருந்த சைக்கிள் பழுதுபார்க்கும் கடைக்குச் சென்றார். ஜப்பானில் பழுதுபார்ப்பு பணிகளுக்குக் கட்டணம் அதிகம் என்பதால் தேவையான பணத்துடன் அவர் சென்றிருந்தார்.

அங்கு சென்றதும், கடைக்காரர் சோனமின் சைக்கிளைப் பார்ப்பதற்கு முன்பாக, அவரது காயங்களைப் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் சைக்கிளைச் சரிசெய்து கொடுத்ததும் சோனம் கட்டணம் எவ்வளவு என்று கேட்டபோது, அந்த ஜப்பானிய கடைக்காரர் புன்னகையுடன் “நோ பிரைஸ்” (No Price) என்று கூறி பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அந்நிய நாட்டுப் பெண் என்றும் பாராமல் அவர் காட்டிய இந்த மனிதநேயம் சோனமை மிகவும் நெகிழ வைத்தது.

Advertisement

கடைக்காரரின் இந்த அன்பால் ஈர்க்கப்பட்ட சோனம், அருகில் இருந்த இந்திய உணவகத்திற்குச் சென்று அவருக்காகச் சூடான இந்திய உணவை பார்சல் வாங்கிக் கொண்டு மீண்டும் மழையிலேயே அந்தக் கடைக்குச் சென்று வழங்கினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தைச் சோனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்த நிலையில், “மனிதநேயத்திற்கு மொழி எல்லைகள் இல்லை” என்பதை உணர்த்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in