“இறைவா இது என்ன கொடுமை.. !” லாரியின் அடியில் சிக்கிய இளம் ஆசிரியர்.. வண்டி நிலைதடுமாறியதால் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இறைவா இது என்ன கொடுமை.. !” லாரியின் அடியில் சிக்கிய இளம் ஆசிரியர்.. வண்டி நிலைதடுமாறியதால் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி வீடியோ..!!

Published

on

வடக்கு சுமத்ரா, மெடான் மரேலான் பகுதியில் சனிக்கிழமை அன்று நடந்த ஒரு கொடூரமான சாலை விபத்தில், இர்னி அங்கிதா ரங்குதி என்ற இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின்படி, அவர் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு லாரியின் இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து லாரி அவர் மீது ஏறி சென்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த விபத்தின் உண்மையான பின்னணி குறித்து இணையத்தில் மாற்றுத் தகவல்களும் வெளியாகி வருகின்றன.

மற்றொரு தரப்பு தகவல்களின்படி, அந்த ஆசிரியை லாரியை முந்த முயலவில்லை என்றும், லாரியே அவரைத் தாண்டிச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது, மற்றொரு நபர் திடீரென அவரது பாதையில் நுழைந்து வண்டியை நிறுத்தியதால், ஆசிரியை நிலைதடுமாறி திடீர் பிரேக் அடித்ததில் டயர்கள் வழுக்கி இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், உண்மையான விபத்து காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை இறைவன் வழங்கவும், அவரது ஆன்மா சாந்தியடையவும் சமூக வலைத்தளங்களில் பலரும் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in