LATEST NEWS
“அட கடவுளே… செத்துட்டாருன்னு சொன்ன மருத்துவர்கள்..” வெளிநாட்டிலிருந்து கதறித் துடித்து வந்த பிள்ளைகள்.. ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு கொண்டு சென்றபோது நடந்த அதிசியம்..!!
தெலங்கானா மாநிலம் சந்துர்த்தி மண்டலத்திற்கு உட்பட்ட சாணுகுலா கிராமத்தைச் சேர்ந்த சீக்கடி சங்கரய்யா என்ற முதியவர், கடுமையான நோய் பாதிப்பு காரணமாகக் கரீம்நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சனிக்கிழமையன்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினரிடம் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களின் வார்த்தையை நம்பி உறைந்துபோன குடும்பத்தினர், முதியவரின் சடலத்தை இறுதிச்சடங்கு செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஜோகாபூர் என்ற பகுதிக்கு அருகே ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது, இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட சங்கரய்யா திடீரென ஆம்புலன்ஸிலேயே எழுந்து உட்கார்ந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை வேமுலவாடாவில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முதியவர் உயிரோடு இருப்பதையும் அவரது உடல்நிலை சீராக இருப்பதையும் உறுதி செய்தனர். தந்தையின் இறப்புச் செய்தியைக் கேட்டு வளைகுடா நாட்டிலிருந்து பதறியடித்து ஓடிவந்த அவரது மகன்களுக்கும் குடும்பத்தினருக்கும் இது அளப்பரிய மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தது. செத்து பிழைத்த முதியவரை நேரில் காண சுற்றுவட்டாரக் கிராம மக்கள் திரளாகக் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
