LATEST NEWS
“சாவு வரை வந்தும் சாக விடல..” ஆற்றில் மூழ்கிய பெண்ணைக் காப்பாற்றிய துர்கா தேவி சிலை.. சிலிர்க்க வைக்கும் உண்மைச் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள வர்கல் மண்டலம் நச்சரங்குட்டா அருகே உள்ள ஹல்தி வாங்கு செக் டேமில் ஒரு வியக்கத்தக்க சம்பவம் நடந்துள்ளது. கஜ்வெல் மண்டலம் பிரக்யாபூரைச் சேர்ந்த 50 வயதான சீர்லா பாளமணி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண், வாழ்க்கையில் விரக்தியடைந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆற்றில் குதித்த அவர் நீரில் மூழ்கும்போது, எதிர்பாராதவிதமாக அவரது கைகளில் துர்கா தேவி சிலையின் இரும்பு Stand சிக்கியது. உடனே அவர் அந்த Stand-ஐப் பலமாகப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதக்க முயன்றார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆற்றில் துர்கா தேவி சிலை Stand-ஐப் பிடித்துக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணைக் கண்ட உள்ளூர் மக்கள், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் காவல் நிலையக் காவலர் விஷ்ணு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர், காவலர் விஷ்ணு மற்றும் அப்பகுதி மக்களின் கூட்டு முயற்சியால் அப்பெண் ஆற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். சரியான நேரத்தில் கிடைத்த இந்த உதவியால் அந்தப் பெண்ணின் உயிர் தப்பியது.
இதையடுத்து, சீர்லா பாளமணியின் குடும்பத்தினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த பாளமணியின் மகனும், மருமகனும் அவரை மீட்டு பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டுப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய காவலர் விஷ்ணுவையும், உதவிய உள்ளூர் மக்களையும் பலரும் பாராட்டினர். தெய்வச் செயலாகத் துர்கா தேவி சிலை Stand உதவியும், மக்களின் சரியான நேரத்து உதவியும் சேர்ந்து ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளது.
