LATEST NEWS
“‘என்னை லவ் பண்ணு ப்ளீஸ்…” காதலிக்குமாறு வற்புறுத்திய சகமாணவன்.. மன உளைச்சலில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! கதறி துடிக்கும் பெற்றோர்..!!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த காமேபல்லி மண்டலம், கொத்தலிங்கலா கிராமத்தைச் சேர்ந்தவர் பாலே நாகேஸ்வர ராவ். இவரது 21 வயது மகள் பாலே யாஃபியா. இவர் கம்மமில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பாராமெடிக்கல் டிப்ளோமா படித்து வந்தார்.
அவருடன் பயின்று வந்த சையத் அனஸ் என்ற மாணவர், காதல் என்ற பெயரில் யாஃபியாவிற்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், தன்னைக் காதலிக்குமாறும் திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தி, அவருக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். கடந்த அக்டோபர் 23 அன்று, கல்லூரியில் வைத்து சையத் அனஸ் மீண்டும் அவருக்குக் கடும் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த யாஃபியா, அக்டோபர் 27 அன்று தனது சொந்த ஊரான கொத்தலிங்கலா கிராமத்திற்குத் திரும்பி, எலி மருந்தை உட்கொண்டார். தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக யாஃபியாவின் தந்தை நாகேஸ்வர ராவ் அளித்த புகாரின் பேரில், காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
