LATEST NEWS
“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..” விஜய்யின் தாய்மாமன் திட்டத்தில் திடீரென நுழைந்த திரிஷா… ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் கிளம்பிய புது புயல்..!!
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் வழங்கும் தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவரது வருகையையொட்டி மதுரை மாநகர் முழுவதும் மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள வினோத போஸ்டர்கள் பொதுமக்களையும் அரசியல் விமர்சகர்களையும் பார்க்க வைத்துள்ளன.
மதுரையின் முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், ஒருபக்கம் பச்சிளம் குழந்தையை முதல்-அமைச்சர் விஜய் கையில் ஏந்தியிருக்கும் படம் அச்சிடப்பட்டுள்ளது. மறுபக்கம் நடிகை திரிஷாவின் படம் இடம்பெற்றுள்ளது. அதில், “தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் இல்லை என்று வருத்தப்படும் தாய்மார்களுக்குத் தன்னையே தாய்மாமன் என்று கூறி மகிழ்ச்சியடையும் தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி” என்ற வாசகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
விஜய்யின் மதுரை வருகையையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டர் விவாத பொருளாகியுள்ளது. திரிஷா ரசிகர் மன்றத்தினர் ஒட்டிய இந்த போஸ்டர் பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
