பார்க்கும் போதே கண்ணு கலங்குதே.. நடுரோட்டில் கதறி அழுத நபர்.. காரை நிறுத்தி பெண் செய்த அந்த ஒரு விஷயம்! நெஞ்சை அடைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்க்கும் போதே கண்ணு கலங்குதே.. நடுரோட்டில் கதறி அழுத நபர்.. காரை நிறுத்தி பெண் செய்த அந்த ஒரு விஷயம்! நெஞ்சை அடைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

சமூக வலைதளங்களில் விடுமுறை மற்றும் கொண்டாட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். ஆனால், சில நேரங்களில் மனிதநேயத்தின் மீது நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்தும் சில வீடியோக்களும் வெளிவருகின்றன. அந்த வகையில், கோவா சுற்றுலா சென்ற நிஷிதா என்ற பெண், சாலையில் கதறி அழுது கொண்டிருந்த ஒரு நபருக்கு உதவி செய்த மனதைத் தொடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

வைரலாகும் அந்த வீடியோவில் உள்ள நபர், மகாராஷ்டிராவிலிருந்து தொழிலதிபர் ரீதியாகக் கோவா வந்தவர் ஆவார். ஆனால், அவருக்கு வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதோடு, வேலையும் பறிபோனது. செய்வதறியாது தவித்த அவர், வேறு வழியின்றி சாலையோரம் நின்று கண்ணீர் விட்டு கதறி அழுத்துள்ளார். அப்போது அந்த வழியாகக் காரில் வந்த நிஷிதா, அந்த நபர் அழுவதைப் பார்த்து உடனடியாகத் தனது காரை நிறுத்தி, அவருக்கு உதவி செய்ய முன்வந்தார்.

Advertisement

https://www.instagram.com/reel/Ddx-B4WNGbJ/?utm_source=ig_web_button_share_sheet

நிஷிதா தனது காரின் ஜன்னல் வழியாக அந்த நபரின் துயரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் அவருக்கு ஆறுதல் கூறித் துடைக்க நேப்கின்களை வழங்கி, உணவும் பண உதவியும் அளித்தார். மேலும், இருவரும் தங்கள் தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டனர். நிஷிதா இந்த வீடியோவைப் பகிர்ந்து, “ஒவ்வொரு பயணமும் வெறும் கடற்கரைகளைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, கடவுள் நாம் சந்திக்க விரும்பும் மனிதர்களைச் சந்திப்பதற்காகவும்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நிஷிதாவின் கருணை உள்ளத்தைப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in