“நெஞ்சே நடுங்குது..!” லாரி மோதி ஆட்டோ அப்பளமாய் நொறுங்கிய பயங்கரம்.. இருவர் உடல் நசுங்கி பலி.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நெஞ்சே நடுங்குது..!” லாரி மோதி ஆட்டோ அப்பளமாய் நொறுங்கிய பயங்கரம்.. இருவர் உடல் நசுங்கி பலி.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!

Published

on

தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் நஸ்பூர் கேட் பகுதியில் நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த லாரி ஒன்று, பயணிகள் சென்ற ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இக்கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து, தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் மந்தமரி மண்டலம் குடிபள்ளி மற்றும் பொன்னாரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in