LATEST NEWS
“அப்ப பாட்டிலுக்கு 10 ரூபா பாட்டு பாடுனாங்க… இப்ப தவெக ஆட்சியில் 30 ரூபாய்” விஜ்ஜ அரசை பேரவையில் கிழித்து தொங்கவிட்ட செந்தில் பாலாஜி..!!
சட்டப்பேரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். திமுக சார்பில் செந்தில் பாலாஜி விளக்கம் கேட்க முற்பட்டபோது, அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் இந்த வெளிநடப்பு அரங்கேறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “முன்பு ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் எனப் பாட்டுப் பாடியவர்கள், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்” எனக் கடுமையாகச் சாடினார். மேலும், கடந்த ஆட்சியில் ஊழல் நடந்தது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க அரசு நினைப்பதாகவும், முடிந்தால் அதனை நீதிமன்றத்தில் நிரூபித்துக் காட்டுங்கள் என்றும் சவால் விடுத்தார்.
திமுகவின் கொள்கை எப்போதுமே பூரண மதுவிலக்குதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும், அதனால்தான் முந்தைய ஆட்சியில் கடைகள் படிப்படியாக மூடப்பட்டன என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பேரவையில் அமைச்சர்கள் பொத்தாம் பொதுவாகக் பேசாமல், உரிய ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
