LATEST NEWS
“நான்கு அணா அளவுக்குக் கூட ஊழல் இல்லை..ஆனா உங்க 10 ஆண்டு கால ஆட்சியில்..!” காங்கிரஸை கிழித்து தொங்க விட்ட அமித்ஷா.. பரபரக்கும் அரசியல் களம்..!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்கள் நடைபெற்றதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குஜராத்தின் சபர்மதி ரயில் நிலையத்தில் நாட்டின் முதல் எல்.என்.ஜி ரயிலைத் தொடங்கிவைத்து உரையாற்றிய போதே அவர் இந்த விமர்சனத்தை மேற்கொண்டார். மேலும், காங்கிரஸ் கட்சி தற்போதைய அரசு மீது அர்த்தமற்ற மற்றும் ஆதாரமற்ற விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
அதே வேளையில், கடந்த 12 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ‘நான்கு அணா’ அளவுக்குக் கூட யாரும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்ல முடியவில்லை என்று அமித்ஷா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தற்போதைய பா.ஜ.க அரசு முற்றிலும் ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ரயில்வே துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் நாடு அடைந்து வரும் அதிவேக நவீனமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
