“தாயின் அக்கவுண்ட்டிற்குப் போன ரூ.2.5 லட்சம்..” வீட்டு உரிமையாளர் செய்த பகீர் காரியம்.. மைனர் சிறுமி தற்கொலையில் அம்பலமான கொடூர உண்மை.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“தாயின் அக்கவுண்ட்டிற்குப் போன ரூ.2.5 லட்சம்..” வீட்டு உரிமையாளர் செய்த பகீர் காரியம்.. மைனர் சிறுமி தற்கொலையில் அம்பலமான கொடூர உண்மை.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் கவினகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிநகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த மைனர் சிறுமி செப்டம்பர் 16 அன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விபரீதம் நடந்த பின், வீட்டின் உரிமையாளர் சிறுமியின் தாயார் கணக்கில் இரண்டரை லட்சம் ரூபாய் செலுத்தி விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதுடன், காவல்துறையினர் தற்கொலைக்கான காரணத்தை முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மறைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் பகிரங்கப் பணப் பரிவர்த்தனை தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், சிறுமிக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், குழந்தை தொழிலாளர் முறை மற்றும் சட்டவிரோதமாக வழக்கை முடிக்க முயன்றது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மற்றும் காவல்துறையினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in