LATEST NEWS
கரூர் Gang.. எவ்ளோ சூப்பர் பேரு பாருங்க.. அந்த Gang-வோட தலைவன் யார் தெரியுமா..? செந்தில் பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட முதலமைச்சர் விஜய்…!
சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, முதுபெரும் அரசியல் புள்ளியான செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினரைக் குறிவைத்து முதலமைச்சர் விஜய் மிக ஆக்ரோஷமான விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த காலங்களில் கரூரை மையமாக வைத்து நடந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், “கரூர் Gang.. எவ்ளோ சூப்பர் பேரு பாருங்க.. அந்த Gang-வோட தலைவன் தான் இந்த செந்தில் பாலாஜி” என்று அவையிலேயே நேரடியாக விளாசித் தள்ளினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் காரசாரமாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து ‘கரூர் கேங்’ என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட கும்பல் முறையான திட்டமிடலுடன் மாமூல் வசூலில் ஈடுபட்டதாக அடுக்கடுக்கான புகார்களை வாசித்தார். “விஞ்ஞான ஊழல் என்று சொல்வார்களே, அது இவர்களின் இந்த வசூல் வேட்டையில்தான் கச்சிதமாகப் பொருந்தும்” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
திமுக எங்கு அதிகாரத்திற்கு வந்தாலும், அங்கு ஊழலும் முறைகேடுகளும் நிழல் போலத் தொடர்கின்றன என்பதற்கு இந்த ‘கரூர் கும்பல்’ விவகாரமே மிகச்சிறந்த சான்று என்று முதலமைச்சர் விஜய் சாடினார். முறைகேட்டையும் மிகவும் முறையாகச் செய்வதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்று அவர் விமர்சித்தபோது, அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து எழுந்து நின்றதால் பேரவை வளாகத்தில் மீண்டும் பெரும் சலசலப்பும் அரசியல் பதற்றமும் தொற்றிக்கொண்டது.
