“அவள் சரியாகப் படிக்கவில்லை..” 3-ஆம் வகுப்பு சிறுமிக்கு தென்காசி அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த கொடூரம்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“அவள் சரியாகப் படிக்கவில்லை..” 3-ஆம் வகுப்பு சிறுமிக்கு தென்காசி அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த கொடூரம்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா, துரைசாமிபுரம் இடைகால் பகுதியில் அமைந்துள்ள இந்து மறவர் சமூகத்திற்கான அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வந்த ஷிவானி என்ற சிறுமிக்கு, அவர் சரியாகப் படிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி வலுக்கட்டாயமாகப் பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கிப் பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பேராதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி நேரத்தின் போது அந்தச் சிறுமியின் பெற்றோரை அவசரமாக வரவழைத்த பள்ளி நிர்வாகம், “உங்கள் மகள் சரியாகப் படிப்பது இல்லை, மற்ற மாணவர்களுடன் போட்டியிடும் அசாத்திய திறன் அவளுக்குக் கிடையாது, அதனால் அவள் இங்குப் படிக்கத் தகுதியற்றவள்” என்று கூறி, எவ்வித முறையான மற்றும் சட்டப்பூர்வமான காரணமும் இன்றி டிசியைக் கையில் கொடுத்துப் பெற்றோரையும் மாணவியையும் அசுரத்தனமாகப் பள்ளியை விட்டு விரட்டியடித்து நரகச் சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக, ஒரு குழந்தை கூடப் பள்ளியை விட்டு நின்றுவிடக் கூடாது, எப்படியாவது உயர்கல்வி வரை அனைவரையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று திராவிட மாடல் ஆட்சியில் போராடிய தமிழக கல்வித்துறை, தற்போதைய சோபா மாடல் ஆட்சியில் இப்படி அடியோடு சீர்கெட்டுத் தடுமாறி வருவது பொதுமக்கள் மத்தியில் மாபெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“எங்கள் கல்வி எங்கள் உரிமை” என்று முழங்கிய தமிழ்நாட்டில், ஒரு பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் விதமாக, ஒரு பிஞ்சுச் சிறுமியைப் படிக்கத் தகுதியற்றவள் என்று முத்திரை குத்தி அவளது எதிர்கால வண்டவாளத்தை அசிங்கமாகச் சிதைத்த அந்தப் பள்ளி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது தமிழக முதலமைச்சர் அசுர வேகத்தில் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பாரா என்ற நியாயமான கேள்விக் கணைகள் அசுரத்தனமாக எழுந்துள்ளன. இச்சம்பவம் குறித்துச் சமூக ஆர்வலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர், பள்ளி கல்வித்துறை மற்றும் முதலமைச்சர் அலுவலக எக்ஸ் கணக்குகளைக் குறிப்பிட்டு ஆதாரங்களுடன் அவசரப் புகாரைப் பதிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in