LATEST NEWS
“மக்களுக்கு நல்ல சாவே வராது” என திமுக மூத்த நிர்வாகி சொல்வதா?” மக்களைப் பார்த்து எப்படி இப்படிப் பேச முடியுது..? திமுகவிற்குப் பேரவையில் சாட்டையடி கொடுத்த முதலமைச்சர் விஜய்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு நல்ல சாவே வராது என்று திமுக மூத்த நிர்வாகி பேசியதற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “மக்களைப் பார்த்து எப்படி இப்படிப் பேச முடிகிறது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என்று ஆவேசப்பட்ட அவர், ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை மதிக்கத் தெரியாதவர்கள் எதற்காக அரசியலில் நீடிக்க வேண்டும் என்றும் நேரடிக் கேள்வி எழுப்பினார். தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பொதுமக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசும் எதிர்க்கட்சியினரின் இத்தகைய போக்கு அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்று முதலமைச்சர் விஜய் சாடினார். மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் வன்மத்தைக் கக்கும் தலைவர்களுக்குத் தமிழக மக்கள் வரும் காலங்களிலும் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
