LATEST NEWS
ஒரு சரக்கு பாட்டிலுக்காக உயிர்போன கொடூரம்.. வரிசைத் தகராறில் கூலித் தொழிலாளி கழுத்தறுத்துக் கொடூரக் கொலை… திருச்சியில் பயங்கரம்..!!
திருச்சி மாவட்டம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் (30), சமயபுரம் நால்ரோடு டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வரிசைத் தகராறு கைகலப்பாக மாறியது.
மோதலின் போது மர்ம நபர் ஒருவர் பிரகாஷின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்ததில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்; பட்டப்பகலில் நடந்த இப்படுகொலை அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
சமயபுரம் போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தப்பியோடிய மர்ம நபரைத் தேடி சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
