LATEST NEWS
“த்ரிஷாவால் எல்லாம் வீணாப்போச்சு” சங்கீதாவைச் சமாதானப்படுத்த லண்டன் பறந்த விஜய்யின் பெற்றோர்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான குடும்பப் பிரச்னைக்குச் சமரசம் செய்ய, விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா தம்பதியினர் லண்டனில் தங்கியிருக்கும் சங்கீதாவை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக சங்கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, த்ரிஷாவுடனான நட்பைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவின. இதனால் இந்தச் சமரசப் பேச்சுவார்த்தை குடும்பப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், லண்டனில் நடைபெற்ற பார்முலா கார் பந்தய நிகழ்வில் நடிகர் அஜித்தின்RedAnt பந்தய அணியை வாழ்த்த முதலமைச்சர் விஜய் சென்றபோது, அங்கு நடிகை த்ரிஷாவும் வந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லண்டனில் த்ரிஷா, விஜய் மற்றும் ராதிகா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், இந்தச் சந்திப்பால் கோபமடைந்த சங்கீதா சமரசப் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தாரும் இணைந்து மேற்கொண்ட இந்தச் சமரச முயற்சி தோல்வியில் முடிந்ததாகத் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
