LATEST NEWS
காலையிலேயே பரபரப்பு..! தமிழக முதல்வர் விஜய் டீப் பேக் வீடியோ… ராஜஸ்தான் இளைஞரைத் தூக்கிய சிபிசிஐடி..!!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உருவத்தைப் பயன்படுத்தி, இந்தி ஆடியோவுடன் கூடிய போலி ஏஐ டீப் பேக் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தயாரித்து பரப்பிய வழக்கில், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் அருகே உள்ள பூந்தோலியைச் சேர்ந்த ஷயாபு கான் (28) என்ற இளைஞரை சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் கைது
செய்துள்ளனர். இணையவழி கண்காணிப்பின் போது ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் நோக்கில் இந்த வீடியோக்கள் பரப்பப்பட்டது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், சிம் கார்டுகள் மற்றும் சிபியு ஆகிய டிஜிட்டல் தடயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் பிடிபட்ட அவரைத் தமிழகத்திற்கு அழைத்து வந்த சிபிசிஐடி தனிப்படை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, அவரிடமிருந்து வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. இந்த சைபர் குற்றப் பின்னணியில் வெளிநாட்டு நபர்களின் தொடர்பு அல்லது உள்ளூர் கூட்டாளிகள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்து போலீசார் தங்களது டிஜிட்டல் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
