“உன்ன கொன்னுடுவேன்… கார்கில் போர் நாயகனை அலறவிட்ட பார்க்கிங் ஊழியர்…” பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உன்ன கொன்னுடுவேன்… கார்கில் போர் நாயகனை அலறவிட்ட பார்க்கிங் ஊழியர்…” பரபரப்பு பின்னணி..!!

Published

on

1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்திய விமானப்படையின் ‘ஆப்பரேஷன் சஃபேத் சாகர்’ நடவடிக்கையில் பங்காற்றிய ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் அமித் குமார் குப்தா, குருகிராமில் உள்ள மேக்னம் குளோபல் பார்க் வளாகத்தில் பார்க்கிங் ஊழியரால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட பயங்கர சம்பவத்தை விவரித்துள்ளார். செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் உணவகத்திற்குச் சென்றபோது, பல இடங்களில் முயன்றும் அவருக்கு கார் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். காரை பின்னோக்கி எடுக்க முயன்றபோது, பார்க்கிங் ஊழியர் ஒருவர் காரின் கண்ணாடியை உடைக்கும் நோக்கில் தட்டியுள்ளார். அதைக் கேட்டு வெளியே வந்து கேட்ட அமித் குமாரை, அந்த ஊழியர் “உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டிக்கொண்டே கனமான இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, தலையிலும் பலத்த காயம் அடைந்தார். அதிக அளவில் ரத்தம் சிந்திய அவருக்கு அங்கிருந்த உணவகச் சமையல்காரர் ஒருவர் தலையிட்டு உயிரைக் காப்பாற்றினார்.

தாக்குதலுக்குப் பிறகு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வருவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஆனதாக அமித் குமார் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின்னர், அவரது குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மேதாந்தா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது முழங்கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், காவல் துறைக்கு மருத்துவமனை நிர்வாகம் அளித்த மருத்துவ-சட்ட அறிக்கையில் தனக்கு ஏற்பட்ட பெரிய எலும்பு முறிவு மற்றும் தீவிர காயங்கள் பற்றிய தகவல்கள் விடுபட்டுள்ளதாகவும், கைகளில் 1 செ.மீ அளவுள்ள சிறிய வெட்டுக்காயங்கள் மட்டுமே உள்ளதாகத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை உடனடியாகத் திருத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

https://www.ndtv.com/shorts/gurugram-news-op-safed-sagar-veteran-attacked-with-iron-rod-by-parking-staff-1157915

இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ள அமித் குமார் குப்தா, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் சாட்சிகளையும் ஆய்வு செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மருத்துவமனையும் சரியான மருத்துவ அறிக்கையை அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதிநவீன வானளாவிய கட்டிடங்களும் சொகுசு வீடுகளும் நிறைந்த குருகிராம் நகரில், நாட்டின் போரில் களமிறங்கிய ஒரு ராணுவ வீரருக்கே பொது இடத்தில் இத்தகைய தாக்குதல் நடந்திருப்பது, அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in