CINEMA
காசுக்காக உடம்பை விக்கிறது எவ்வளவு பெரிய வலி தெரியுமா..? நடிகை சரண்யா நாக் கொடுத்த ஷாக் பேட்டி..!!
காதல்’, ‘பேராண்மை’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை சரண்யா நாக், தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து அண்மையில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் பல உருக்கமான மற்றும் வேதனையான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
தான் தனியாக வசிப்பதால் தன்னிடம் ஆண்கள் நடந்துகொள்ளும் விதம் மிகவும் மோசமாக உள்ளதாக அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஆண்கள் தனது கண்களைப் பார்த்துப் பேசுவதை விட, உடலின் மற்ற பகுதிகளைப் பார்த்து தன்படுத்திக் கொள்ளவே துடிக்கிறார்கள் என்ற கோபத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆண்களைக் காட்டிலும் பெண்களைப் பற்றிப் பேசிய சரண்யா, ஒரு பெண்ணை இன்னொரு பெண் தான் அசிங்கப்படுத்தவும், அழிக்கவும் முயல்கிறாள் என்று சாடியுள்ளார். பெண்களிடம் பிற பெண்களுக்கான உதவி செய்யும் குணம் இருப்பதில்லை என்றும், பொறாமை மட்டுமே அதிகமாக இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆண்களிடம் ஓரளவு கரிசனம் இருந்தாலும்கூட, பெண்களிடம் அதுவும் இருப்பதில்லை என்ற தனது கசப்பான அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
வறுமை மற்றும் நெருக்கடியான சூழல் காரணமாக காசுக்காகத் தங்களது உடலை விற்கும் பெண்களைத் தான் ஒருபோதும் குறை சொல்வதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முகம் தெரியாத ஒருவரிடம் உடலை விற்பது எத்தகைய வேதனை நிறைந்தது என்பதை தான் அறிவதாகவும், அந்த இடத்திற்கு அவர்கள் தள்ளப்படும் ஏழ்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அத்தகைய பெண்களைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து அவர்களைக் குறை கூற வேண்டாம் என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
