CINEMA
“விஜய் சார்.. த்ரிஷாவை கண்டிப்பா தவிர்த்திருக்கலாம்…” எம்.ஜி.ஆர், சிவாஜியை பார்த்து கத்துக்கோங்க.. முதலமைச்சர்க்கு செய்யாறு பாலு அட்வைஸ்..!!
லண்டனில் நடைபெற்ற நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தில் முதலமைச்சர் விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒரே கேலரியில் இருந்து போட்டியை பார்த்த வீடியோ இணையத்தில் தீயாய்ப் பரவி வரும் நிலையில், பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு இதுகுறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். இத நீங்க கண்டிப்பா தவிர்த்திருக்கலாம் விஜய் சார் என கூறியுள்ளார். கார் பந்தயம் நடந்து கொண்டு இருக்கும் போது, அத கேலரிலே த்ரிஷா பந்தயத்தை பார்த்துட்டிருக்காங்க. பக்கத்தில் சிஎம் விஜய் இருக்காரு, அந்த பக்கம் அமைச்சர் ஆதவ் இருக்கிறார். டக்குனு அவங்க பக்கத்துல கேமரா வருது, சிஎம் விஜய் கேமராவுக்கு தெரியாமல் உள்ள போயிருந்தாரு. இந்த வீடியோவை பார்த்ததும் பலரும் கடுப்பாகிட்டாங்க. ஏங்க இவங்க எங்க போனாலும் வராங்க? எதுக்காக வராங்க? சிஎம் பேரை கெடுப்பதற்காக வராங்களா? போன்ற கேள்விகள் விஜய் பிரச்சார பயணத்தை தொடங்கியதுல இருந்து இந்த விஷயம் பெரும் பேசுபொருளாகி வருது.
த்ரிஷா ஒரு நடிகை, ஒரு பெண், அவங்க மேல ஏன் இவ்வளவு வன்மத்தைக் கக்குறீங்க? அவங்களை ஒரு பெண்ணா பாருங்க, விஜய் – த்ரிஷா இடையே நட்பு கூட இருக்கலாம்ல? விஜய்யை அரசியலில் வீழ்த்த முடியாத சிலர், த்ரிஷாவை வச்சு அவதூறுகளை பரப்பி வன்மத்தை கக்குறாங்க. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் எதையும் பார்க்கல, ஜோசப் விஜய் ஒரு நல்ல ஆட்சியை கொடுப்பார்னு மட்டும்தான் பார்த்து ஓட்டு போட்டு அவரை ஜெயிக்க வைத்தாங்க. ஒருத்தரோட பர்சனல்ங்குறது அவங்களோட தனிப்பட்ட விஷயம், அதை விமர்சிக்க நமக்கு எந்த தகுதியும் இல்லை. ஆனால், ஒரு தலைவர்களின் தனிமனித ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. எம்.ஜி.ஆர் சினிமாவில் எப்படி இருந்தாலும், திருமணம் அல்லது எந்த விழாவாக இருந்தாலும் தன் மனைவி ஜானகியுடன் தான் செல்வார். சிவாஜி கணேசனை பற்றி பல கிசுகிசுக்கள் வந்தாலும், வீட்டிற்கு சென்றுவிட்டால் கமலாம்மாவுக்கு நல்ல கணவராக, ராம்குமார்-பிரபுவுக்கு நல்ல அப்பாவா இருந்தார். அதுதான் அவரோட இமேஜை காப்பாத்தியது.
ஆனா, முதலமைச்சர் விஜய் சார்… த்ரிஷா உங்க பக்கத்துல நிற்கிற இந்த விஷயத்தை நீங்க கண்டிப்பா தவிர்த்திருக்கலாமே? உங்களை பற்றியும் உங்க ஆட்சியை பற்றியும் ஏற்கனவே பல விமர்சனங்கள் இருக்கு. வெறுவாய மென்னுட்டு இருக்கவங்களுக்கு அவல் கொடுத்த மாதிரி இந்த சம்பவம் ஆகிடுச்சு. நீங்க கோடிக்கணக்கான மக்களோட தலைவர், ஒரு மாநிலத்தோட முதல்வர், 2K கிட்ஸ், ஜென்ஸி இளைஞர்கள் உங்களைத்தான் ரோல் மாடலா பார்க்குறாங்க, அவர்களுக்கு நீங்க ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என அவர் பேசி உள்ளார்.
