த்ரிஷாவுக்கு இனி கல்யாணம் நடந்தாலும்… அதை நினைச்சி கதறி அழுவாங்க… ஜாதகத்தில் இருக்கும் அந்தப் பெரிய தோஷம்.. ஜோதிடர் கணிப்பால் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CINEMA

த்ரிஷாவுக்கு இனி கல்யாணம் நடந்தாலும்… அதை நினைச்சி கதறி அழுவாங்க… ஜாதகத்தில் இருக்கும் அந்தப் பெரிய தோஷம்.. ஜோதிடர் கணிப்பால் பரபரப்பு..!!

Published

on

பிரபல ஜோதிடரான ரேவதி ராஜேஷ்கண்ணா அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நடிகை திரிஷாவின் அரசியல் வருகை மற்றும் அவரது திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு அதிரடியான கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் முதலமைச்சராவார் என்று ஜோதிடர் ஷெல்வி கணித்தது நிஜமானதைத் தொடர்ந்து பலருக்கும் ஜோதிடம் மீது நம்பிக்கை அதிகரித்துள்ள சூழலில், திரிஷா குறித்த இந்த புதிய கணிப்புகள் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.

திரிஷாவின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், தற்போதைய சூழலில் திரிஷா அரசியலுக்குள் நுழைந்தால் அவருடைய ஜாதகம் அதற்கு முழுமையாக ஆதரவாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தற்போதைய நேரத்தில் அரசியல் ரீதியாக மிகவும் சாதகமான சூழல் இருந்தாலும், எதிர்காலத்தில் குறிப்பாக 2030-ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் சில பெரிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். அந்த காலகட்டத்தில், தான் எதற்காக அரசியலுக்கு வந்தோம் என்று கதறி அழக்கூடிய அளவிற்குப் பெரிய சோதனைகளும் சவால்களும் வர வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார்.

Advertisement

திரிஷாவுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும் திருமணத்திலும் ஏன் இவ்வளவு தடைகள் வருகின்றன என்பது குறித்தும் அந்த ஜோதிடர் விளக்கியுள்ளார். திரிஷாவின் ஜாதகத்தில் புகழுக்கான காரகனான சுக்கிரன் உச்ச பலத்துடன் இருப்பதால் அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிறார். ஆனால், மகர ராசியைச் சேர்ந்த அவருக்குக் காலசர்ப்ப தோஷம் அல்லது ராகு – கேது பாதிப்புகள் இருப்பதால் தான், ஏற்கனவே ஒருமுறை நிச்சயம் வரை சென்ற திருமணம் கூட நின்றுபோனது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனிமேல் திரிஷா திருமணம் செய்து கொண்டாலும் அந்த வாழ்க்கை நிலைக்காது என்றும் அது வெறும் பெயருக்கான திருமணமாக மட்டுமே இருக்குமே தவிர, தம்பதியருக்குள் ஆத்மார்த்தமான அந்நியோன்யம் இருக்காது என்றும் ஜோதிடர் கூறியுள்ளார். மகர ராசிக்காரர்கள் தங்களுக்குப் பிடித்த விஷயத்தை அடைவதில் பிடிவாதமாகவும், பிடிக்காத பட்சத்தில் அதிலிருந்து விலகும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். உத்திராடம், திருவோணம், அபிஜித் நட்சத்திரங்களின் ஆதிக்கம் இருப்பதால், இந்த ராசியினர் நினைத்தால் ஒரு விஷயத்தை ஆக்கவும் முடியும், தேவையில்லை எனில் அழிக்கவும் முடியும் என்று கூறி ரேவதி ராஜேஷ்கண்ணா தனது கணிப்பை முடித்துள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in